"முட்டாள்களிடையே ஒரு 'மிகப் பெரிய முட்டாள்' இருந்தால், அது ராகுல் காந்தி தான்" என பாஜக எம்.பி பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
![nayab singh saini controversial speech about rahul gandhi](http://image.nakkheeran.in/cdn/farfuture/_nzEFRmJq0K3mvcrQBhJ_cCI1gjlWl22v7HWu4e-WcY/1577793683/sites/default/files/inline-images/fbxfgbnx.jpg)
குருக்ஷேத்திர தொகுதியின் பாஜக எம்.பி நயாப் சிங், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ராகுல் காந்தி தவறான வழிநடத்தலை மேற்கொண்டு வருகிறார் என விமர்சித்தார். அவரது இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் கைதால் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய நயாப் சிங், "குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளது. முட்டாள்களிடையே ஒரு 'மிகப் பெரிய முட்டாள்' இருந்தால், அது ராகுல் காந்தி என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் அவருக்கு CAA என்றால் என்ன, அது யாருக்கானது என்று தெரியவில்லை" என தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.