நாளை அரசியலில் உச்சகட்ட பரபரப்பாக 7ஆம் கட்ட அதாவது இறுதி கட்ட வாக்குபதிவு நடைபெற உள்ளது. இறுதி கட்ட பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் மோடி கேதார்நாத்க்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு மோடி செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதற்கு பின்னணியில் என்னவென்று விசாரித்த போது மோடி அரசு மீது ஆர்.எஸ்.எஸ். தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றால் மோடிக்கு பதில் நிதின் கட்காரியை பிரதமராக்க ஆர்.எஸ்.எஸ். தலைமை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த விஷத்தை அறிந்து தான் நிதின் கட்காரி போட்டியிடும் நாக்பூர் தொகுதியில் தேர்தல் பிரசாரத்துக்கு மோடி செல்லவில்லை என்ற தகவலும் வந்துள்ளது. இத்தனைக்கும் நாக்பூர் விமான நிலையத்தில் இறங்கித்தான் வார்தா பகுதிக்கு மோடி சென்றுள்ளார்.
நிதின் கட்காரி அனைவரிடம் அனுசரித்து செல்லக் கூடியவர் என்பதால் மாநில கட்சிகளின் ஆதரவை எளிதாக பெற முடியும் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைமை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது அதனால் பிரதமர் வேட்பாளராக கட்காரியை நிறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மீண்டும் தனக்கே பிரதமர் ஆக ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தை மோடி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை சந்திக்க மோடி திட்டமிட்டுள்ளாதாகவும் கூறப்படுகிறது. மே 23க்கு பிறகு யார் ஆட்சியை பிடிப்பார்கள், யார் பிரதமர், யார் முதல்வர் என்று பெரும் பரபரப்பை எட்டியுள்ளது.