Skip to main content

அணில் அம்பானியை காப்பற்றவே மோடி பொய் சொல்கிறார்- ராகுல் காந்தி

Published on 22/09/2018 | Edited on 22/09/2018
rahul gandhi


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் பாஜக முறைகேடு செய்துள்ளது என்று கடந்த ஒரு வருடமாக மோடி மீது குற்றச்சாட்டு வைத்து வருகிறார். அதற்கு ஏற்றார் போல், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒவ்வொரு முறை ஒன்று பேசி வருகிறார். காங்கிரஸை பாஜக விமர்சிக்க, பாஜக காங்கிரஸை விமர்சிக்க என்று இரு கட்சிகளும் தங்களை விமர்சித்து கொண்டெ இருக்கிறது.
 

இந்நிலையில், ஃப்ரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஃப்ராங்கோயிஸ் ஹாலண்டே, ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது என்று கூறியுள்ளார். 

பின்னர், இதுகுறித்து ராகுல் காந்தி ட்விட்டரில், ''இந்திய ராணுவத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடியும், அனில் அம்பானியும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியுள்ளனர். இந்தியாவின் ஆன்மாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி துரோகம் இழைத்துவிட்டார். பிரதமர் நரேந்திர மோடியும், அனில் அம்பானியும் சேர்ந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி சுருட்டியுள்ளனர்'' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸை பரிந்துரைக்கவில்லை என்று மோடி கூறுகிறார். ஆனால், ஃப்ரான்ஸ் முன்னாள் அதிபர், மோடிதான் பரிந்துரை செய்தார் என்று சொல்கிறார். ஃப்ரான்ஸ் முன்னாள் அதிபரின் குற்றச்சாட்டுக்கு மோடி பதில் அளிக்க வேண்டும்.பேல் ஒப்பந்தம் மாற்றப்பட்ட போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிகர், ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. ரிலையன்ஸ் அணில் அம்பானியை காப்பாற்றவே மோடி அரசு பொய் சொல்லி வருகிறது என்று கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்