உண்ணாவிரதம், சிறை நிரப்புவது என்று அரசியல் கட்சியினர் நூதனப் போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று. இதேபோன்றதொரு போராட்டம், அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவை அரங்கிற்குள் இன்று அரங்கேறியது. அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில், நிலம் விற்பனை தொடர்பான புதிய கொள்கை, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எதிரொலித்து வருகின்றன.
இந்த நிலையில் இப்பிரச்சனைகளை முன்னிறுத்தி, காங்கிரஸ் எம்எல்ஏ ஷெர்மன் அலி அகமது உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்கள், மாநில சட்டப்பேரவை அரங்கிற்குள், மல்லாந்து படுத்தப்படி நூதனப் போராட்டத்தை மேற்கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அஸ்ஸாம் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது என்பதும். அக்கட்சியைச் சேர்ந்த சர்பானந்தா சோனோவால் முதல்வராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.