ராஜஸ்தானில், மன்னிப்புக் கடிதம் எழுதி வைத்துவிட்டு சைக்கிளை இளைஞர் ஒருவர் திருடிச் சென்ற சம்பம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 46 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2,000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 85,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் இந்தியாவில் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது. இதனால் இந்தியாவில் புலம் பெயர் தொழிலாளிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்படுகிறார்கள்.
அப்படி ஒரு சம்பவம் தற்போது ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தானில் உள்ள பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள ராதா கிராமத்தில் இக்பால் என்பவர் வேலை செய்து வந்தார். அவர் இந்த ஊரடங்கின் காரணமாக கடந்த சில வாரங்களாக வேலை இல்லாமல் இருந்துள்ளார். இதனால அவர் தனது சொந்த ஊரான உத்தர பிரதேசம் செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால் வாகனம் எதுவும் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்த அவருக்கு, தான் வேலை பார்க்கும் உரிமையாளர் வீட்டில் இருக்கும் சைக்கிள் கண்ணில்பட்டது. ஆனால் கேட்காமல் எடுத்துச் செல்வதற்குக் கஷ்டமாக இருந்ததால் அந்தச் சைக்கிளின் உரிமையாளருக்குத் தெரியும் படி மன்னிப்புக் கடிதம் எழுதி வைத்துவிட்டுல 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன்னுடைய ஊருக்கு சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இந்தக் கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.