மெட்ரோவில் மின்சார வயர் அறுந்து விபத்து
புதுடெல்லி சாஸ்திரி பூங்கா- காஷ்மீரி கேட் இன்டர்சேஞ்ச் ரயில் நிலைய சிவப்பு வழிதடத்தில், மின்சார வயர் அறுந்து தொங்கியதால், பாதுகாப்பு கருதி பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். கடந்த ஞாயிறு அதிகாலை சாஸ்திரி பூங்காவிலிருந்து காஷ்மீர் கேட் இன்டர்சேஞ்ச் ரயில் நிலையம் வழியாக ரிதுலா சார்ந்த மெட்ரோ ரயில் ஒன்று வந்தது. ரயில் காஷ்மீரி கேட் இன்டர்சேஞ்ச் ரயில் நிலையத்தில் நுழைவதற்குள், சிவப்பு வழிதடம் வழியாக சென்ற மின்வயர் அறுந்து விழுந்தது. வயரில் சிக்காமல் இருக்க, உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து அசம்பவாதிதம் ஏற்படாமல் தவிர்க்க பாதுகாப்பு கருதி பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.