முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் கடந்த ஜூன் மாதம் முடிவடைந்தது.
அதன் பின் அவரை மீண்டும் எம்.பி ஆக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவர் எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அசாம் மாநிலத்தில் இருந்து ஐந்து முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார் மன்மோகன் சிங். இதனையடுத்து மீண்டும் ஆறாவது முறையாக மாநிலங்களவை எம்.பி யாகும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி அவருக்கு அளித்துள்ளது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. அதே போல ராஜஸ்தானில் இருந்த பாஜக எம்.பி மதன்லால் சைனி கடந்த ஜூன் மாதம் காலமானார். எனவே தற்போது அவர் இடத்தில் மன்மோகன் சிங் போட்டியிடுகிறார். இதற்காக வரும் 13 ஆம் தேதி மனு தாக்கல் செய்கிறார். வரும் 26 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.