மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நடைபெற்று வரும் அரசியல் மோதல்கள், கட்சித் தாவல் சம்பவங்களால் அம்மாநில அரசியலில் அனலடித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் வாய்ப்பிருந்தால் பவானிப்பூர் தொகுதியிலும் போட்டியிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நந்திகிராம் தொகுதி, சமீபத்தில் திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த, முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியின் தொகுதியாகும். சுவேந்து அதிகாரி, அந்த தொகுதியில் பலமிக்கவராக கருதப்படும் நிலையில், அதே தொகுதியில் போட்டியிடப்போவதாக மம்தா பானர்ஜி அறிவித்திருப்பது மேற்குவங்கத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.