சிறையில் காய்கறிகள் பயிரிடுவதே குர்மீத் சிங்கிற்கு பிரதான வேலை!
தனது பக்தைகள் இருவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி, தேரா சச்சா சவுதா என்ற அமைப்பைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு, 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து பன்ச்குலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, ஹரியானாவின் ரோக்தக் சிறையில் அடைக்கப்பட்ட குர்மீத் சிங், தொடர்ந்து சிறைதண்டனை அனுபவித்து வருகிறார். அங்கு, அவருக்கு தோட்டவேலைகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள சிறிதளவு நிலத்தில் குர்மீத் காய்கறிகளைப் பயிரிட வேண்டும். இதற்காக அவருக்கு நாளொன்றுக்கு ரூ.20 வருமானமாக கிடைக்கும். இந்த காய்கறிகள் சிறையில் சமைக்கப்படும் உணவுகளுக்காக பயன்படுத்திக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.