Skip to main content

கன்னட பெயரை மாற்றிய கேரளா: கர்நாடகா எதிர்ப்பு

Published on 29/06/2021 | Edited on 29/06/2021
jkl

 

கேரளாவில் உள்ள காசர்கோடு மாவட்டம் கர்நாடக எல்லையில் அமைந்ததுள்ளது. இந்த மாவட்டத்தில் அதிகமான நபர்கள் கன்னட மொழி பேசுபவர்களாக இருக்கிறார்கள். இதனால் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களின் பெயர்கள் கன்னட மொழியில் அமைந்துள்ளது. இதற்கிடையே அந்த மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளாட்சி நிர்வாகம், கன்னட மொழி பெயர்களை நீக்கி மலையாளத்தில் பெயர் வைத்துள்ளனர். மல்லா என்று இருந்த பெயரை மல்லம் என்றும், மதுரு என்று இருந்த பெயரை மதுரம் என்றும் உள்ளாட்சி நிர்வாகிகள் மாற்றியுள்ளனர். இந்நிலையில், கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு கர்நாடக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்