தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை கொண்ட கேரளா, கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு 112பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் கடந்த 8ஆம் தேதி தொடங்கிய கனமழை இன்றுவரை விடாது பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் 72 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 2.5லட்சம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக எனவும் கூறப்படுகிறது.
மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவமும் கடலோர காவல்படையும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது.
இதேபோல கர்நாடகாவில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு 40 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.