Published on 26/10/2023 | Edited on 26/10/2023

கர்நாடகாவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள பாகெப்பள்ளி பகுதி தேசிய நெடுஞ்சாலையோரம் டேங்கர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது ஆந்திராவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த கார், லாரி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. பனிமூட்டத்தால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 3 வயது குழந்தை, 4 பெண்கள் என காரில் இருந்த 14 பேரில் 13 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.