Published on 27/01/2020 | Edited on 27/01/2020
13 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29- ஆம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, "13 ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் மே 24- ஆம் தேதி நடைபெறும். போட்டிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படாது. தலையில் பந்து தாக்கி காயமடையும் வீரருக்கு பதில் மாற்று வீரர் களமிறங்கும் முறையும் ஐபிஎல் தொடரில் அறிமுகபடுத்தப்படும்". இவ்வாறு சவுரவ் கங்குலி பேசினார்.