நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வெற்றிகரமாக அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் உச்சத்தில் இருந்து வருகின்றது. போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உத்தரபிரதேசத்தில் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டது.
இந்நிலையில், மாநிலத்தில் குடியுரிமை தொடர்பாக தினமும் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இணைய சேவையை அம்மாநில அரசு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தடை செய்துள்ளது. பாதுகாப்பு படையினர் மாநிலம் முழுவதும் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.