டோக்லாமிலிருந்து இந்திய ராணுவம் வாபஸ்!
இந்திய சீன எல்லையில் உள்ள டோக்லாமிலிருந்து இந்திய ராணுவம் தன்னிச்சையாக வாபஸ் பெற்றதாக சீனா அறிவி்த்துள்ளது.
சமீப வாரங்களாக இந்திய அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியதாகவும் அதன் முடிவில் டோக்லாமிலிருந்து இந்திய ராணுவத்தை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
அடுத்த சில நாட்களில் சீனாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சீனா செல்கிறார். இதையடுத்து சீனாவின் வற்புறுத்தலை ஏற்று இந்திய ராணுவத்தை வாபஸ் பெற இந்தியா முடிவு செய்ததாக தெரிகிறது.