கரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, இந்தியாவில் நான்கு லட்சம் பேருக்கு தினசரி கரோனா உறுதியானது. அதன்பின்னர் இந்தியாவில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் இந்தியாவில் நேற்று (11.10.2021) 14,313 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இது மார்ச் மாத தொடக்கத்திற்குப் பிறகு, அதாவது கிட்டத்தட்ட 224 நாட்களில் இந்தியாவில் ஒருநாளில் பதிவாகியுள்ள குறைவான தினசரி பாதிப்பு இதுவாகும். இந்த 14,313 கரோனா பாதிப்புகளில் 6,996 பாதிப்புகள் கேரளாவிலிருந்து பதிவாகியுள்ளது. இந்தியாவிலேயே அதிக தினசரி கரோனா பாதிப்பு பதிவாகும் மாநிலமாக கேரளா இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியாவில் கரோனாவிலிருந்து மீள்பவர்களின் சதவீதம் 98.04 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த மார்ச் 2020இல் இருந்ததற்குப் பிறகான அதிகபட்ச கரோனா மீள் சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.