இந்தியாவில் ஏழு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது . இதில் தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த வியாழக்கிழமை (18.04.2019) அன்று நடந்து முடிந்தது. இந்த நிலையில் குஜராத்தில் இருக்கும் 26 பாராளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது . இதற்கான பிரச்சாரம் கடந்த சில வாரங்களாக பிரச்சாரம் நடைபெற்று நேற்றுடன் பிரச்சாரம் முடிந்தது .
ஆனால் குஜராத்தில் ராஜ்சமதியால கிராமத்தில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர் அந்த ஊர் கிராமத்து மக்கள் அது என்னவென்று விசாரித்தபோது இந்த ஊரில் எந்த அரசியல் கட்சிகளும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும் அது மக்களுக்கு இடையூறாக இருக்கும் என்றும், அதே நேரம் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அப்படி வாக்களிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ரூ.51 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறுகின்றனர். இந்த மாதிரி அந்த கிராமத்தில் பல விதிமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர்.