ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஜி.எஸ்டி வரியை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல்லாமே செல்போன் மயம் என்றாகிப்போன உலகில் உணவு, பல்பொருள் அங்காடி போன்ற பொருட்களை நொடியில் ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட முடிகிறது. அதிலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு இன்றைய இளைஞர்களின் மோகம் அதிகமென்றே சொல்லலாம். இந்த நிலையில் ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜிஎஸ்டி கவுன்சலில் உள்ள சில நிதியமைச்சர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான வரியை 28 சதவிகிதமாக உயர்த்த பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. விரைவில் நடக்கவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த பரிந்துரையை ஏற்றுக் கொள்ளலாமா அல்லது இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மட்டுமல்லாமல் குதிரைப் பந்தயங்கள், சூதாட்ட வருமானங்களுக்கும் 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.