புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோரி நிறைவேற்றிய தீர்மானத்திற்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோரி கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் தராமல் கடந்த மூன்று மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்ட புதுச்சேரிக்கு, தனிமாநில அந்தஸ்து கோரி நிறைவேற்றிய தீர்மானத்திற்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மான கோப்பு ஜூலை 22 ஆம் தேதிதான் கிடைத்ததாகவும், அதற்கு அடுத்த நாளே அதாவது ஜூலை 23 ஆம் தேதியே தீர்மானத்திற்குத் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் வழங்கிவிட்டதாகவும் புதுச்சேரி ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.