Skip to main content

“இந்திராவும், ராஜீவும் கொல்லப்பட்டது தியாகமல்ல...” - பாஜக அமைச்சர்

Published on 01/02/2023 | Edited on 01/02/2023

 

 Minister ganesh joshi said Indira Gandhi, Rajiv Gandhi passed away Were Accidents

 

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொண்ட 'இந்திய ஒற்றுமைப் பயணம்' ஸ்ரீநகரில் நிறைவடைந்துள்ளது. 135 நாட்கள், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 3,750 கிலோமீட்டர் கடந்து இந்த பயணத்தை ராகுல் காந்தி ஸ்ரீநகரில் கொடியேற்றி நிறைவு செய்தார்.

 

அப்போது பேசிய ராகுல் காந்தி, “என்னுடைய பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட செய்தி எனக்கு மிகுந்த வலியை கொடுத்தது. அந்த வலியை வன்முறையைத் தூண்டும் மோடி, அமித்ஷா, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அறிந்திருக்கமாட்டார்கள். ஆனால் ராணுவத்திற்கும் கஷ்மீரிகளுக்கும் இந்த வலி தெரியும் என்றார்.

 

இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சு குறித்து பேசிய உத்தரகாண்ட் அமைச்சர் கணேஷ் ஜோஷி, "தியாகம் அவரது குடுப்பத்திற்கு மட்டும் சொந்தமல்ல. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், சாவர்க்கர் போன்றவர்கள்தான் தியாகம் செய்திருக்கின்றனர். இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி இருவரும் கொல்லப்பட்டது தியாகமல்ல; அது ஒரு விபத்து. விபத்துக்கும், தியாகத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. பிரதமர் மோடியால் தான் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் ராகுல் காந்தியால் தேசியக் கொடியை ஏற்ற முடிந்தது. பிரதமர் மோடி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 நீக்காவிட்டால் அங்கு இயல்புநிலை திரும்பியிருக்காது. பாதுகாப்பாக கொடியும் ஏற்றியிருக்க முடியாது" எனத் தெரிவித்திருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்