மத்தியப்பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அம்மாநில மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் மழையை நிறுத்துவதற்காக போபால் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தினர் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மழை பெய்ய வேண்டும் என்பதற்காக கடந்த ஜூலை மாதம் போபாலில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்துவைத்தனர். அதன்பின் அங்கு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் மழையை நிறுத்துவதற்காக அக்கிராம மக்கள் திருமணம் செய்து வைத்த தவளைகளுக்கு விவாகரத்து செய்து வைத்துள்ளனர். திருமணம் செய்தால் மழை ஏற்படும் என நம்பிய அம்மக்கள், தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போல மழை பெய்தது. எனவே தற்போது விவாகரத்து செய்தல் மழை நிற்கும் என நம்பிய கிராம மக்கள் விவாகரத்து செய்து வைத்ததாக கூறப்படுகிறது. தவளைகளுக்கு விவாகரத்து செய்த இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருவதோடு, பலரும் இதனை கிண்டல் செய்து வருகின்றனர்.