தினமும் ரூ.4 லட்சத்திற்கு தாய்வான் நாட்டு காளான் தின்னும் மோடி?
பிரதமர் மோடி தினமும் தாய்வான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காளான்களை லட்சக்கணக்கில் செலவு செய்து வாங்கித் தின்பாக அல்பேஷ் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கும் ஒ.எஸ்.எஸ். ஏக்தா மன்ச் என்ற அமைப்பின் தலைவர் அல்பேஷ் தாகூர். இவர், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, ‘பிரதமர் மோடி தன்னை எப்போதும் சாதாரண மனிதர் என சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர் உண்மையில் அப்படி இல்லை. தனக்கு குஜராத்தான் எல்லாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் அவருக்கு குஜராத்தி உணவுகளைப் பிடிப்பதில்லை.அவர் தாய்வானில் இருந்து ரூ.80,000 மதிப்புள்ள காளானை இறக்குமதி செய்து தினமும் ஐந்து காளான்கள் வீதம் உண்கிறார்’ எனக் கூறினார்.
மேலும், ‘பாஜகவைச் சேர்ந்த தலைவர் பனஸ்கந்தா வெள்ளபாதிப்புகளுக்காக வழங்கப்பட்ட நிவாரண நிதி ரூ.1,500 கோடியை சொந்த தேவைகளுக்காக பயன்படுத்திவிட்டனர்’ என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.