உத்தரபிரதேசம்- மீரட்டில் இருந்து டெல்லி சென்றுள்ள விவசாயிகள், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாரத் கிசான் யூனியன் விவசாயிகளான இவர்கள், டெல்லி- காசியாபாத் எல்லையில் தடைகளை உடைத்து, டெல்லிக்குள் நுழைந்துள்ளனர்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி ‘அநீதிக்கு எதிராக குரல் எழுப்புவது குற்றமல்ல; ஒரு கடமையாகும். காவல்துறையின் போலியான முதல் தகவல் அறிக்கை மூலம், விவசாயிகளின் வலுவான நோக்கங்களை, மோடி அரசால் மாற்ற முடியாது. கருப்பு சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இறுதிவரை தொடரும்.
இந்த புகைப்படம் மிகவும் சோகமானது. எங்கள் முழக்கம் ‘ஜெய் ஜவான்! ஜெய் கிசான்!’என்பதாகும். இன்றோ, பிரதமர் மோடியின் ஆணவம், விவசாயிகளுக்கு எதிராக ஜவான்களை நிற்க வைத்துள்ளது. இது மிகவும் ஆபத்தானது.’என்று பதிவிட்டுள்ளார்.
பிரியங்கா காந்தியும் தனது ட்விட்டில்‘பா.ஜ.க. ஆட்சியில் நம் நாட்டின் நிலைமையைப் பாருங்கள்! தனது முதலாளி நண்பர்கள் டெல்லிக்கு வரும்போது சிவப்பு கம்பளம் விரிக்கிறது. விவசாயிகள் வரும்போதோ. வழிகளெல்லாம் தோண்டப்படுகின்றன. விவசாயிகளுக்கு எதிராக அவர் ஒரு சட்டத்தை உருவாக்கினார். அதனால், டெல்லி அரசாங்கத்திடம் முறையிட வருகின்றனர். இது ஒரு தவறா?’என்று கேட்டுள்ளார்.
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும்‘தவறுகள்’தொடர்வது கொடுமைதான்!