பசுவை வணங்குபவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள்: மோகன் பாகவத்
நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் பசுவின் பெயரைச்சொல்லி அப்பாவிகள் பலர் தாக்கப்பட்டு வருகின்றனர். அதில் பலர் கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்தேறின. இது மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியும், இன்னமும் ஓயாமல் இருக்கிறது.
பசுகுண்டர்களால் அப்பாவிகள் தாக்கப்படுவது குறித்து பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், பசுவை வணங்குபவர்கள் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள். பசுக்களை வளர்ப்பது பொருளாதார ரீதியில் நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும். பசு வளர்ப்பவர்களது உணர்வுகளே பாதிக்கப்பட்டாலும், அவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்றார்.
சுதேசிப் பொருட்கள் குறித்து, சுதேசி எனப்படுவது உள்நாட்டில் சிறுகுறு நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படுபவை என்றார்.
பசுவதை செய்தார்கள் என்ற பெயரில் அப்பாவிகளைத் தாக்கிய பெரும்பாலானோர் இந்துத்துவ அமைப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்