Skip to main content

'ரெடியா இருங்க...' - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022
Corona again...- Central government instructions to state governments

 

உலகம் முழுவதும் பரவிய கரோனா வைரஸ் லட்சக்கணக்கான உயிர்ப் பலிகளை வாங்கியது. அதன் பிறகு தடுப்பூசி, ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை மூலம் கட்டுப்பாட்டிற்குள் வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் அதன் புதிய அலையைத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ள மத்திய அரசு, ‘சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில், கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.

 

இதனைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் இன்று பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கொடுத்துள்ளது. அதன்படி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், 'அனைத்து மாவட்டங்களிலும் போதிய அளவு கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தற்போதைய நிலவரத்திற்கேற்ப கடைப்பிடிக்க வேண்டும். கரோனா உறுதி செய்யப்பட்டோரின் ரத்த மாதிரிகளை உடனே மரபணு ஆய்வகத்திற்கு அனுப்ப வேண்டும்' என அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்