Skip to main content

நீட் தேர்வில் மெகா மோசடி- கண்டுபிடித்த சி.பி.ஐ.!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

CBI detects mega scam in NEET exam


மகாராஷ்டிரா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி மையம் நீட் தேர்வில் மெகா மோசடி செய்ததைக் கண்டுபிடித்தது சி.பி.ஐ.

 

இது குறித்து சி.பி.ஐ. தெரிவித்துள்ளதாவது, "மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.கே.எஜூகேசன் கேரியர் கைடன்ஸ் பயிற்சி மையம் நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டது.  பயிற்சி மையத்தில் பயின்ற ஐந்து மாணவர்கள் மூலம் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் மெகா மோசடி நடந்துள்ளது. டெல்லி, ராஞ்சியைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோரிடம் ரூபாய் 50 லட்சம் பெற்றுக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது அம்பலமாகியுள்ளது. தேர்வர்களின் விவரங்கள், ஓ.எம்.ஆர்.தாள்களில் போலியாக திருத்தம் செய்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஐந்து மாணவர்கள் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. கிரிமினல் சதி, மோசடி, ஆள்மாறாட்டம், ஆவணங்களைத் திருத்தி மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பதில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கியது விசாரணையில் தெரிய வந்தது. ஹால் டிக்கெட்டில் புகைப்படங்களை மார்பிங் செய்து நீட் தேர்வு எழுதி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளது. 

 

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12- ஆம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்