அமேசான்,பிளிப்கார்ட் உட்பட பல ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் கேஷ்-ஆன் டெலிவரி முறை அங்கீகரிக்கப்படவில்லை என ரிசவ் வங்கி தெரிவித்துள்ளது.
அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தின் போது வாங்கப்படும் பொருளுக்கு செலுத்தும் பணத்தை மின்னணு பரிமாற்றம் மூலம் செலுத்தலாம். அப்படி பணத்தை மின்னணு பரிமாற்றம் செய்ய முடியாதவர்கள் பொருளை நேரில் பெற்றுக்கொண்டு பணத்தை செலுத்தும் கேஷ்-ஆன் டெலிவரி எனும் முறையை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் அண்மையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இந்தியன் ரிசர்வ் வங்கி ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்கியுள்ள எந்த நிறுவனத்திற்கும் கேஷ்-ஆன் டெலிவரி முறை அங்கீகரிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் பொருள் வாங்கும் வாடிக்கையாளர்கள் மின்னணு முறையில் பணம் செலுத்தவும், இடைத்தரகர்களாக செயல்படும் நிறுவனங்கள் மின்னணு முறையிலேயே வர்த்தகர்களுக்கு பரிமாற்றம் செய்ய மட்டுமே அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் ரிசர்வ் வாங்கி விளக்கம் கொடுத்துள்ளது.