Published on 28/11/2018 | Edited on 28/11/2018

டிசம்பர் 7 ஆம் தேதி தெலுங்கானாவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் 32 வயதான சந்திரமுகி என்ற மூன்றாம் பாலின வேட்பாளர் நேற்றிரவு மாயமாகியுள்ளார். இவர் ஹைதராபாத்தில் உள்ள கோஷமஹால் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த சம்பவம் குறித்து பஞ்சாராஹில்ஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.