Published on 06/02/2024 | Edited on 06/02/2024

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சந்தா கோச்சாரின் கணவர் தீபக் நடத்தி வந்த நிறுவனத்தில் வீடியோகான் குழுமம் முதலீடு செய்தது. அதற்காக வீடியோகான் நிறுவனத்திற்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் இருந்து ரூ. 3,250 கோடி கடன் அளிக்கப்பட்டிருந்தது. இதில் கடன் பெற தகுதியில்லாத வீடியோகான் குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதன் மூலம் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் ரூ. 64 கோடி பெற்றதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து சந்தா கோச்சார், தனது பதவியில் இருந்து விலகினார். அதன்பின் சந்தா கோச்சார், அவரது கணவர் மற்றும் வீடியோகான் நிறுவன அதிபர் வி.என்.தூத் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. அதன் பின்னர் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர்.
வாசகர்கள் சாய்ஸ்: நாட்டிலேயே முதல் மாநிலமாக அமலாகும் பொது சிவில் சட்டம்?; சட்டசபையில் பலத்த பாதுகாப்புடன் விவாதம்
இது தொடர்பான வழக்கு விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் ஆகியோர் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இருவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனையும் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.