பாலிவுட் நடிகர் அக்க்ஷயகுமார் மத்திய அரசு ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கூட்டத்தில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதற்கு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
One of those days when a news brings tears of joy as a cause close to ur heart gets fulfilled.Thank you, #GSTCouncil,for understanding the need for menstrual hygiene & exempting sanitary pads from tax. I'm sure crores of women in our country are silently sending gratitude ur way
— Akshay Kumar (@akshaykumar) July 21, 2018
பாலிவுட் நடிகரான அக்க்ஷயகுமார் அண்மையில் ''பேட்மன்'' என்ற பெண்களுக்கான மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நேற்று ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 28-வது கூட்டம் இடைக்கால நிதி மந்திரி பியூஷ் கோயல் தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு வரிவிதிப்பு குறைக்கப்பட்டது, அதில் பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களுக்கு முற்றிலும் வரிவிலக்கு கொடுக்கப்பட்டது. இதை கேள்விப்பட்ட பாலிவுட் நடிகர் அக்க்ஷயகுமார் நாப்கினுக்கு வரிவிலக்கு கொடுத்த அரசிற்கு ட்விட்டரில் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.