Skip to main content

பேஸ்புக்கில் கணக்கு தொடர ஆதார் கட்டாயமா? - உண்மை என்ன?

Published on 27/12/2017 | Edited on 27/12/2017
பேஸ்புக்கில் கணக்கு தொடர ஆதார் கட்டாயமா? - உண்மை என்ன?

அரசு திட்டங்கள், சிம்கார்டுகளில் என எல்லாவற்றிற்கும் ஆதாரை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல், பேஸ்புக் பயன்படுத்த இனி ஆதார் கட்டாயம் என்றால் என்ன செய்வீர்கள்? அப்படி ஒரு செய்திதான் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 



உண்மை என்ன?

இந்தியளவில் 24 மில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது பேஸ்புக் நிறுவனம். அதில் இருக்கும் பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் தங்கள் சொந்த பெயர்களைப் பயன்படுத்துவதில்லை. அதனால், பயன்பாட்டாளர்கள் தங்கள் சொந்தப் பெயர்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விதமாக, பேஸ்புக் தரப்பில் இருந்து இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது புதிய கணக்கு தொடங்குபவர்களுக்கு மட்டுமே. அதாவது, பேஸ்புக்கில் புதிதாக கணக்கு தொடரும் பக்கத்தில், ப்ராம்ட் எனும் செய்தி ஒன்று உங்கள் ஆதார் அட்டையில் இருக்கும் பெயரைக் குறிப்பிடலாம் என பரிந்துரைக்கும். வேண்டுமென்றால், அந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இந்த ப்ராம்ட் எல்லோருக்கும் வரவில்லை. இதனை ஒரு சோதனை முயற்சியாகவே மேற்கொண்டுள்ளோம் என பேஸ்புக் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதில் ஆதார் எண் குறித்து எந்த இடத்திலும் கேட்கப்படவில்லை.

தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்படவேண்டும், ஆதார் அதைத் தவறிவிட்டது போன்ற முழக்கங்கள் நாடெங்கும் எழுப்பப்பட்டு வருகின்றன. அதை உண்மையாக்கும் விதமாக ஆதார் விபரங்கள் பல்வேறு இணையதளங்களில் வெளியிடவும் செய்யப்பட்டன. எனவே, தனிப்பட்ட தகவல்களை காக்கும்பட்சத்தில் ஆதார் அட்டை விவரங்களை எந்த தளத்திலும் பதிவிட வேண்டிய அவசியமில்லை.

சார்ந்த செய்திகள்