Published on 04/08/2024 | Edited on 04/08/2024

மத்திய பிரதேசத்தில் கோவில் சுவர் இடிந்து விழுந்து ஒன்பது சிறார்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் ஹர்தவுல் பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென கோவிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் பலர் சிக்கிக் கொண்ட நிலையில் இதுவரை 9 சிறார்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் 'இழப்பை தாங்கும் சக்தியை அவர்களது குடும்பத்திற்கு கடவுள் வழங்க வேண்டும். இறந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தோர் குணமடைய கடவுளைப் பிரார்த்திக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.