
ஊரடங்கால், தனது தாயைப் பிரிந்து டெல்லியில் சிக்கியிருந்த ஐந்து வயது சிறுவன், இன்று விமானம் மூலம் பெங்களூரு வரை தனியாகப் பயணித்து தனது தாயைச் சந்தித்துள்ளான்.
கரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் போக்குவரத்துச் சேவைகள் முடக்கப்பட்ட நிலையில், விஹான் என்ற ஐந்து வயது சிறுவன் டெல்லியிலும், அவனது தாய் பெங்களூருவிலும் சிக்கிக்கொண்டனர். தனது தாயைச் சந்திக்க சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக முயன்று வந்த அந்தச் சிறுவன், இன்று உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியவுடன் விமானம் மூலம் பெங்களூரு வந்துள்ளான். சுமார் 2,100 கிலோமீட்டர் தூரம் விமானத்தில் தனியாகப் பயணித்து, இன்று காலை கெம்பகௌடா விமானநிலையத்தில் தனது தாயைச் சந்தித்துள்ளான் அந்தச் சிறுவன். இதுகுறித்து அச்சிறுவனின் தாய் கூறுகையில், "எனது 5 வயது மகன் விஹான் சர்மா டெல்லியிலிருந்து தனியாகப் பயணம் செய்து இங்கு வந்துள்ளான். ஊரடங்குக்குப் பின் தற்போது 3 மாதங்கள் கழித்து மீண்டும் பெங்களூருக்கு வந்துள்ளான்" எனத் தெரிவித்துள்ளார்.