உ.பியில் டிராக்டர் கவிழ்ந்து 15 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கங்கை நதியில் புனித நீராட பக்தர்களை டிராக்டரில் ஏற்றிச் சென்ற பொழுது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டரில் மக்களை ஏற்றிக் கொண்டு கங்கை நதியில் புனித நீராடல் நிகழ்த்துவதற்காக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது குளத்திற்கு அருகே உள்ள சாலை பகுதியில் சென்ற டிராக்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்தது. இதில் டிராக்டரில் பயணித்த அனைவரும் குளத்தில் மூழ்கினர். இதில் முதற்கட்டமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்ததும் அந்த பகுதிக்கு விரைந்த மக்கள் மற்றும் மீட்புப் படையினர் ஒன்றிணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில், மீட்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கங்கை நதியில் புனித நீராட சென்றவர்கள் குளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.