சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தி.மு.கவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்கள் எழுதிய "2ஜி அவிழும் உண்மைகள்" என்னும் நூல் வெளியீட்டு விழா, நடைபெற்றது.
கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில் நடைப்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன், கவிஞர்.வைரமுத்து, தமிழ் இந்து நாளிதழில் பதிப்பாசிரியர் இந்து என்.ராம், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, அதன் முதல் பிரதியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து விழாவில் திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் பேசியதாதவது,
வரலாற்றில் பல வழக்குகள் உண்டு, ஒரு வழக்கே வரலாறானது என்றால் அது 2ஜி வழக்கில் தான். 2ஜி வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை, மேல்முறையீடு செய்யாமல் விட்டு விடுவதற்கு இது என்ன சங்கரராமன் கொலை வழக்கா? என கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய இந்து என்.ராம், 2ஜி வழக்கில் எடுத்து கொண்ட சுறுசுறுப்பை வியாபம் ஊழல் வழக்கில் மத்திய அரசு காட்டவில்லை. ஊழலலுக்கு எதிரான வழக்குகள் நம் நாட்டில் எப்படி நடக்கிறது. யார் மூலம் நடத்தப்படுகிறது என ஆராய்ந்தால் நாம் அதில் தத்துவ ஞானியாக மாறிவிடும் அபயாம் உள்ளது. தங்களை எதிர்ப்பவர்களுக்கு அழுத்தம் தர மட்டுமே மத்திய அரசு சி.பி.ஐ, வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது என கூறினார்.
இதனையடுத்து விழாவில் பேசிய கவிஞர்.வைரமுத்து, திராவிட இயக்கத்தை அழிக்க ஊதி பெரிதாக்கியதே 2ஜி வழக்கு என்றும், ஆற்றின் நீரோட்டத்தில் குப்பைகளும், அழுக்குகளும் வந்து போகும், ஆனால் திராவிட இயக்கம் என்ற ஜீவநதி என்றும் அழியாது என தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வளைதளங்களில் யாரோ ஒரு ராஜா கருத்தினை தெரிவிப்பதாக பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை மறைமுகமாக விமர்சித்த அவர், இணையத்தையே அலைபேசியில் விரைவாக வர வழி வகை செய்தவர் இந்த ஆ.ராசா என தெரிவித்தார்.
பின்னர் பேசிய ஆ.ராசா, 2ஜி அலைக்கற்றை ஊழல் ஆரம்பத்திலேயே என்னால் மறுக்கப்பட்டது. என்னை விசாரித்தவர்களுக்கு 2ஜி ஸ்பெக்டரம் என்றால் என்ன என தெரியவில்லை. அதை நான் விளக்கினாலும் 2ஜி என்றால் என்ன என்று அவர்களுக்கு புரியவில்லை. இறுதியல் நான் ஊழல் செய்ததாக கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் 15 முறை ஆஜராகி விளக்கம் அளித்தேன். நானே நீதிமன்ற மேடை ஏறி சொன்னால் மட்டுமே இதன் உண்மை வெளிவரும் என்பதற்காகவே வழக்கில் நானே வாதாடினேன். இதனை தவறாகக் கணித்துள்ளார் வினோத்ராய். இறுதியில் 2ஜி வழக்கில் ஊழல் செய்யப்படவில்லை என்று நிரூபனமானது. சி.பி.ஜ. தரப்பில் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்காத காரணத்தால் இந்த வழக்கை யூகத்தின் அடிப்படையில் தாக்கல் செய்துள்ளதாக ஓ.பி.ஷைனி இவ்வழக்கின் தீர்ப்பினை வாசித்தார்.
அதன் அடிப்படையில், இந்த வழக்கில் என்னையும், கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்தனர். இதுவரை யாரும் நான் எழுதிய புத்தகத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்யவில்லை இதுவே என் புத்தகத்திற்கு கிடைத்த வெற்றி என அவர் கூறினார்.
பின்னர், ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை என்ற பாடலை பாடி தன் உரையை ஆரம்பித்தார் மு.க.ஸ்டாலின், இந்த விழா தி.மு.க.வின் விடுதலை விழா. ராசாவின் விடுதலை மட்டுமல்ல, என் தங்கை கனிமொழியின் விடுதலை, கலைஞர் டி.வி.யின் விடுதலை, ஏன் இதை தி.மு.க.வின் விடுதலையாகவே நான் பார்க்கின்றேன்.
1959 ஆண்டின் விதிமுறைப்படி எந்த அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதோ அதே அடிப்படையில் தான் ஆர்.ராசவும் ஒதுக்கியுள்ளார். இருப்பினும் இந்த விவகாரத்தினால் நாடளுமன்றத்தை எதிர்கட்சிகள் பலமாக முடக்கினார்கள். எனவே உடனடியாக கலைஞர் ராசாவை அழைத்து ராஜினாமா செய்யச் சொன்னார். உடனே ராசவும் ராஜினாமா செய்தார்.
இது போன்று தற்போது மத்தியில் நடக்கும் பல ஊழல்களுக்கு குற்றம் நிரூபிக்கப்படாத போதிலும், இப்போதைய எம்.பி.க்களோ, அமைச்சர்களோ தைரியமாக ராஜினாமா செய்வார்களா? அதனையும் செய்து இவ்வழக்கில் ஆளும் தரப்பின் சாட்சியங்களையும், சி.பி.ஐ.தரப்பு வாதங்களையும் திணறடித்து பின் வாங்க செய்து திறம்பட வாதடிய ஒரே முன்னாள் எம்.பி ஆ.ராசா மட்டுமே.
இதன் மூலம் திமுகவின் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியிருக்கிறது. விமர்சனம் செய்தவர்கள் வாய் அடைத்து மறைந்து நிற்கிறார்கள். விடுதலை பெற்றவர்கள் வெளியே வலம் வருகிறார்கள் என அவர் கூறினார்.