காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. காவிரி வாரியம் அமைக்காவிட்டால் அடுத்த கூட்டத்தொடரிலும் போராட்டம் தொடரும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம். நாடாளுமன்றத்தை முடக்குவோம். காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு மதிக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்காமல் அறவழி போராட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கது. 1974 முதல் மத்தியில் உள்ள எந்த அரசும் தமிழகத்துக்கு செவிசாய்க்கவில்லை. தமிழகத்தில் ஆளுநரை விட அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது. ஆய்வு குறித்து ஆளுநரிடம் கேட்ட போது, மக்களை சந்திக்கவே ஆய்வு என கூறினார். இவ்வாறு தம்பிதுரை பேட்டி அளித்தார்.