Skip to main content

ப்ரமோத் முத்தாலிக் மீது சட்டப்படி நடவடிக்கை! - குமாரசாமி உறுதி

Published on 19/06/2018 | Edited on 19/06/2018

எழுத்தாளர் கௌரி லங்கேஷ் குறித்து அவதூறாக பேசிய ராமசேனா தலைவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி உறுதியளித்துள்ளார்.
 

kumarasamy

 

 

 

கடந்த சனிக்கிழமை ஸ்ரீராம் சேனா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவர் ப்ரமோத் முத்தாலிக், ‘கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சியின்போது பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். அப்போதெல்லாம் காங்கிரஸ் அரசின் தோல்வியைப் பற்றி யாருமே பேச முன்வரவில்லை. ஆனால், கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டது குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். பலர் கௌரி லங்கேஷ் கொலை மரணம் குறித்து பிரதமர் மோடி பேசவேண்டும் என வலியுறுத்துகின்றனர். கர்நாடகாவில் ஏதோவொரு நாய் செத்துப்போனதைப் பற்றி மோடி ஏன் பேசவேண்டும்?’ என சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார்.
 

ப்ரமோத் முத்தாலிக்கின் இந்த பேச்சை பொதுத்தளத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி, ‘நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. அது முத்தாலிக்கோ அல்லது வேறு யாரோ, சட்டத்தை மீறுகிற மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு ஆதரவாக பேசுகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும்’ என உறுதிபட தெரிவித்துள்ளார். 
 

 

 

மூத்த பத்திரிகையாளரும், தீவிர இந்துத்வ எதிர்ப்பாளருமான கௌரி லங்கேஷ், கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு, கொலையில் ஈடுபட்ட முக்கியக்குற்றவாளி பரசுராம் வகாமாரே உட்பட ஆறுபேரைக் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்