சென்னையில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12வயது காது கேளாத சிறுமியை மிரட்டி அந்த குடியிருப்பில் பணிபுரியும் 15க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளனர்.
அதில் 66 வயதான ரவிக்குமார் என்ற லிஃப்ட் ஆப்பரேட்டர், அங்குள்ளவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு தனது மகளை கடந்த ஜனவரி மாதம் முதல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வந்துள்ளார். அந்த பெண் அடுக்குமாடி குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகள், தரைத்தளம், உடற்பயிற்சி மையம், மொட்டை மாடி போன்ற ஆளில்லா இடங்களுக்கு அழைத்துச் சென்று, மயக்க ஊசி செலுத்தியும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தும் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும், செல்போனில் சிறுமியை ஆபசமாக படம் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டிய அந்த நபர்கள், கத்தி முனையில் தொடர்ந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளனர். சிறுமிக்கு நடந்த இந்த துயர சம்பவம் தற்போது தான் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர் பல நபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் 25க்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டனர்.
இதையடுத்து, லிப்ட் ஊழியர்கள் ரவிக்குமார் (66), பரமசிவன் (60), தினதயாளன் (50), பாபு (36) 4 பேர், செக்யூரிட்டிகள் முருகேசன் (54), பழனி (40), அபிஷேக் (23), சுகுமாரன் (60), இரால்பிரகாஷ் (58), உமாபதி (42) 6 பேர், பிளம்பர்கள் ஜெய்கணேஷ் (23), ராஜா (32), சூர்யா (23), சுரேஷ் (32) இவர் 4 வருடமாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து விலகியுள்ளார்.
இதேபோல், ஜெயராமன் (26) இவரும் 2 வருடங்களாக பிளம்பராக பணிபுரிந்து வந்துள்ளார். ஆனால் கடந்த மாதம் பணியில் இருந்து விலகியுள்ளார். தோட்டவேலை செய்யும் குணசேகரன் (55), உதவியாளர் ராஜசேகர் (46) உள்ளிட்ட 17 பேர் மீது 307, 506 (II) 6, 10, 12, போஸ்கோ சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் சென்னை சைதாப்பேட்டை மகிளா நீதிமன்ற நீதிபதிகள குடியிருப்பில் நீதிபதி சரீதா முன் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட 17 பேரையும் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.