நாட்டின் 72வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பின் சரியாக 7:30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினா. பின்னர் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையை ஆற்றினார். அப்போது அவர், நாடு புதிய வளர்ச்சி நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. இந்த நாள் நாட்டிற்கு புதிய பலத்தை தந்துள்ளது. நாட்டின் மகள்கள் நமது நாட்டிற்கு கவரவத்தை தேடி தந்துள்ளனர். எவரெஸ்டில் மூவர்ணகொடியின் கவுரவத்தையும் பெருமையையும் இந்திர ராணுவம் பாதுகாத்து வருகிறது.
நாட்டில் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாடு புதிய வளர்ச்சிகளை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக இருந்தது. நாட்டின் பல்வேறு இடங்களில் பருவமழை சிறப்பாக பெய்த நிலையில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இயற்கை சீற்றங்களால் பாதிப்பு அடைந்துள்ள மாநிலங்களுக்கு துணை நிற்க வேண்டும்.
சர்வதேச அளவில் வலிமையான பொருளாதார நாடுகளில் இந்தியா 6வது இடத்தை பிடித்துள்ளது. பிற்படுத்தப்பட்டோரின் உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. நாடு புதிய வளர்ச்சிகளை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களுக்கு தலைவணங்குகிறேன்; அம்பேத்கர் எழுதிய அரசியல் சாசனம் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் உள்ளது.
அத்துடன் எல்லாரும் அமரநிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என கூறியுள்ளார் பாரதியார் என பாரதியாரின் கவிதையை குறிப்பிட்டு கூறினார். பல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம். நலிவடைந்தவர்களும் எந்த தடையும் இன்றி முன்னேற அரசு வழிவகை செய்துள்ளது. 2013 ஆண்டு பின்னோக்கி இருந்த நமது நாட்டின் வளர்ச்சி இன்று முன்னேற்றமடைந்துள்ளது.புதிய தொழில்நுட்பத்துடன் விவசாயிகள் பணியாற்றி வருகின்றனர்.
சாலை, வான்வெளி, கடல்வெளி ஆகிய அனைத்திலும் தன்னிறைவு அடைந்து வருகிறோம். நாட்டின் கடைக்கோடி கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புக்களால் நமது விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை கொள்கிறது. இந்தியாவின் குரலை உலக நாடுகள் கேட்க துவுங்கி உள்ளன என்று அவர் கூறினார்.