Published on 09/10/2018 | Edited on 09/10/2018

சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான நக்கீரன் கோபால் அவர்கள் எந்த ஆவணங்களும் இன்றி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமானநிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த ஆசிரியர் நக்கீரன் கோபால் அடையாறு சரக போலீசார் கைது செய்துள்ளனர்.
நக்கீரன் பத்திரிகையில் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பான கட்டுரை வெளியானதை அடுத்து ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த கைதுக்கு பிறகு அவரை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.