


















காவிரி விவகாரம் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், காவிரி விவகாரம் தொடர்பாக வரும் 5-ம் தேதி தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் வள்ளுவர் கோட்டம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பச்சைத்துண்டு அணிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஸ்டாலின், வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட தலைவர்கள் கூறுகையில், இன்று நாங்கள் கைது செய்யப்பட்டாலும் மீண்டும் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் சாலையில் படுத்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். இந்த மறியல் போராட்டத்தால் வள்ளுவர் கோட்டம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.