Skip to main content

ரத்த அழுத்தம் குறைந்ததால் கலைஞர் மருத்துவமனையில் அனுமதி!

Published on 28/07/2018 | Edited on 28/07/2018
face


திமுக தலைவர் கலைஞர் ரத்த அழுத்தம் குறைந்ததால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கலைஞரின் ரத்த அழுத்தம் குறைந்ததால், காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரத்துக்கு மருத்துவர் குழு வருகை தந்தனர். அவர்கள் உடனடியாக மருத்தவமனை அழைத்துச் செல்ல வேண்டும் என கூறியதால் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர்கள், மேல்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் குவிந்துள்ளனர். நேற்றைவிட கலைஞருக்கு இன்று நோய்தொற்று குறைந்துள்ளதாகவும், காய்ச்சல் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தற்போது ஏராளமான திமுக தொண்டர்கள் பெரும் பதட்டத்துடனும், கண்ணீருடனும் மருத்துவமனை குவிந்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்