ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கிய நித்தியானந்தா அந்த தீவை தனி நாடு போல் உருவாக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் பரவின. அந்த நாட்டிற்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும் அதற்கான தனி பாஸ்போர்ட், கொடி உள்ளிட்டவைகளின் புகைப்படங்கள் என சிலவும் வெளியாகின. இந்நிலையில் இந்த தகவல்களை ஈக்வடார் நாட்டு தூதரகம் மறுத்ததோடு, தங்கள் நாட்டிடம் நித்தியானந்தா அடைக்கலம் கேட்டதாகவும், ஆனால் தங்கள் மறுத்ததையடுத்து, அவர் அப்போதே ஹெய்டி தீவிற்கு சென்றிருக்கலாம் எனவும் அந்நாட்டு தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குஜராத் ஆசிரமத்தில் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, நித்யானந்தா இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள மத்திய அரசு இன்டர்போல் உதவியை நாடியது. அதன்படி, நித்யானந்தாவின் இருப்பிடம் குறித்த தகவலைப் பெற வழிவகை செய்யும் ப்ளூ கார்னர் நோட்டீஸை பிறப்பித்துள்ளது இன்டர்போல். சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளை கண்டால் தகவல் அளிப்பதே ப்ளூ கார்னர் நோட்டீஸ் ஆகும்.