Skip to main content

காவிரி விவகாரத்தில் அணிலாகவும் பாலமாகவும் செயல்படுவேன்: கமல்ஹாசன்!

Published on 04/06/2018 | Edited on 04/06/2018
kumar

 


கர்நாடக முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று பெங்களூருவில் நேரில் சென்று சந்தித்தார். காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

நான் ஒரு அரசியல் கட்சி தலைவராக இங்கு வரவில்லை, மக்களின் பிரதிநிதியாக வந்துள்ளேன். குறுவை சாகுபடிக்கான காலம் வந்துவிட்டது, அதனை நினைவுபடுத்தி அதற்கு தேவையான தண்ணீரை திறந்து விடக்கோரி, இந்த சந்திப்பு நடைபெற்றது. அரசியல் தேவைகளை விட விவசாயிகளின் தேவையே மிகவும் முக்கியம்.

இந்த சந்திப்பு மிகவும் நல்ல முறையில் நடைபெற்றது. இரு மாநிலங்கள் மட்டுமன்றி, தேசிய அளவிலான பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கர்நாடக முதல்வர் குமாரசாமியுடனான இந்த சந்திப்பு கூட்டணி குறித்தது அல்ல, மக்களின் நலனுக்கானது, காவிரி விவகாரத்தில் அணிலாகவும் பாலமாகவும் செயல்படுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்