சென்னை உட்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்தது.
சென்னையில் கடந்த இரண்டோர் தினங்களாக அவ்வப்பொழுது மழை பொழிவு இருந்துவருகிறது. அந்த வகையில் இன்று அதிகாலை திடீரென மேக மூட்டம் ஏற்பட்டு மழை பொழிவு இருந்தது. அதிகாலை ஆரம்பித்த மழை காலை 8 மணி வரை நீடித்தது. இதனால், சாலையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்வோர் கடும் சிரமத்துக்குள்ளானர்.
இதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலை முதல் மழை பொழிவு இருந்தது. அதன் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் 20 செ.மீ, புதுச்சத்திரம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ, திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 6.9செ.மீ, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 6.7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.