Published on 16/09/2020 | Edited on 16/09/2020
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம்.
வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்ட 30 பேரும் லக்னோ சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் 1992- ஆம் ஆண்டு டிசம்பர்- ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.