Skip to main content

தீர்ப்பு வர காலதாமதம்: எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெற முடிவு? சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்!

Published on 16/06/2018 | Edited on 16/06/2018
TTv Team


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் மீதான தீர்ப்பு வர காலதாமதம் ஆவதால், இடைத்தேர்தலை சந்திக்க டிடிவி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர் என்றும் விரைவில் உயர்நீதிமன்றத்தில் தாங்கள் தொடுத்த வழக்கை வாபஸ் வாங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, முதலமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக் கோரி கடந்த ஆண்டு, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் வழங்கினர். ஆட்சிக்கும் கட்சிக்கும் எதிராக நடந்து கொண்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயருக்கு பரிந்துரை செய்தார். அவர்களில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன் சபாநாயகரிடம் விளக்கம் அளித்த நிலையில், மற்ற 18 எம்எல்ஏக்களை 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

 

 

சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் தனி நீதிபதி விசாரித்து வந்த இந்த வழக்கு பின்னர் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது. கடந்த ஜனவரி 24ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து, 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஜூன் 14 ஆம் தேதி அன்று பிற்பகல் 1 மணி அளவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு தீர்ப்பு வழங்கியது.. அதில், சபாநாயகரின் உத்தரவு செல்லும் என நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். ஆனால் நீதிபதி எம்.சுந்தர் சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தெரிவித்தார்.

இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பையடுத்து, 3வது நீதிபதிக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 3வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும். தகுதிநீக்க வழக்கின் முடிவு வரும் வரை இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு நீடிக்கும் என்றும் 3வது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  Thanga with ttv


 

 

இந்நிலையில், சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களும் விரைவில் நீதிமன்றத்தை நாடி, தாங்கள் தொடுத்த வழக்கை திரும்ப பெற இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, நீதிமன்றத்தில் தங்களின் வழக்குகளை வாபஸ் பெற்று அடுத்தகட்டமாக காலியாக உள்ள 18 தொகுதிகளிலும் விரைவில் தேர்தலை நடத்தவும் நீதிமன்றத்தில் மனு கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து டிடிவி ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் கூறும்போது, 18 எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கை மட்டும் வரும் திங்கட்கிழமை வாபஸ் பெறுகிறேன். நீதிமன்றத்தை நம்ப தயாராக இல்லை. எனவே, என்னுடைய தொகுதிக்கு எல்.எல்.ஏ வேண்டும் என அறிவித்து விட்டு இடைத்தேர்தல் என்னுடைய தொகுதியில் நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனு கொடுக்க இருக்கிறேன். இது என்னுடைய நிலைப்பாடு மட்டுமே. மற்ற எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு பற்றி எனக்கு தெரியாது என்றார்.

டிடிவி ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வனை போல் மற்ற எம்.எல்.ஏ.க்களும் கூடிய விரைவில் தகுதி நீக்க வழக்கை வாபஸ் வாங்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் அடுத்தகட்ட தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கதமிழ்ச்செல்வனின் தென்னந்தோப்பை சேதப்படுத்திய அரிக்கொம்பன்

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

Arikkompan who damaged the coconut grove of Thanga Tamilchelvan

 

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து தமிழக எல்லையான குமுளி வழியாக கம்பத்திற்குள் நுழைந்த அரிக்கொம்பன் என்ற அரிசி கொம்பன் யானை, நகரில் பல பகுதிகளுக்குள் நுழைந்து மக்களை விரட்டியதில் மக்கள் பதறியடித்துக் கொண்டு வீடுகளுக்குள் புகுந்து தஞ்சம் அடைந்தனர்.

 

இந்த விஷயம் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தெரியவே அரிக்கொம்பனை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். ஆனால் அரிக்கொம்பன் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி வழியாக சென்று சுருளி மலைப்பகுதிக்குள் தஞ்சமடைந்தது. அதைத் தொடர்ந்து அரிக்கொம்பனை பிடிக்க மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

அப்படியிருந்தும் அரிக்கொம்பனை பிடிக்க முடியவில்லை. ஆனால் சுருளிமலை அடிவாரம் பகுதியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் அப்பகுதியில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்கதமிழ்ச்செல்வனுக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்குள் நுழைந்து அங்கிருந்த 300 தென்னை மரங்களை வேரோடு சாய்த்து அழித்திருக்கிறது.

 

nn

 

அதை கேள்விப்பட்ட தங்கதமிழ்செல்வன் மனம் நொந்துபோய்விட்டார். இரண்டு வருடங்களாக தென்னங்கன்றுகளை காட்டுப்பன்றியிடம் இருந்து காப்பாற்றி அதை வளர்த்து மரமாக்கி இன்னும் சில மாதங்களில் காய் கோர்க்கும் நேரத்தில் இப்படி தென்னை மரங்களை அக்கொம்பன் சேதப்படுத்திவிட்டது. ஒரு சில தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களையும் சேதப்படுத்திக் கொண்டு மலைப்பகுதிக்குள் அரிக்கொம்பன் தஞ்சமடைந்து வருகிறதே தவிர இன்னும் வனத்துறையினர் பிடிக்க முடியவில்லை.

 

 

Next Story

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டி.டி.வி. தினகரன்..! (படங்கள்)

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமமுக கட்சித் தலைவர் டி.டி.வி தினகரன், அவரது வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வேளச்சேரி தொகுதியின் அமமுக  வேட்பாளர் சந்திர போஸை ஆதரித்து டி.டி.வி. தினகரன் வேளச்சேரி காந்தி சாலையில் பிரச்சாரம் செய்தார்.