Skip to main content

திமுகவுக்கு தற்காலிக வெற்றியே...

Published on 21/12/2017 | Edited on 21/12/2017
திமுகவுக்கு தற்காலிக வெற்றியே...: வைகைச்செல்வன் பேட்டி



2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து ஆளும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் நக்கீரன் இணையதளத்திடம் கூறுகையில், 

2ஜி முறைகேடு ஊழல் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நாட்டையே உலுக்கிய மிகப்பெரிய குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டு குறித்து 6 வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்றது. 

தற்போது சிபிஐ நீதிமன்றம் சாட்சியங்கள் நிருபிக்கப்படவில்லை என்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திருக்கிறது. 

இருந்தபோதிலும் இது திமுகவுக்கு தற்காலிக வெற்றியே. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் ஒட்டுமொத்த மக்களையும் ஒரு லட்சத்து 76 ஆராயிரம் கோடி முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்று ஆடிட் ஜென்ரல் குற்றம் சாட்டினார். அதன் அடிப்படையில்தான் இந்த வழக்கு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அனைத்து மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

அப்படிப்பட்ட இந்த ஊழல் கரையில் இருந்து திமுக எளிதில் விடுபட முடியாது. தற்போது விடுதலை பெற்றிருந்தாலும் கூட, உச்சநீதிமன்றம் வரை சென்று சிபிஐ மேல்முறையீடு செய்யும். அதன் பிறகுதான் இறுதி வடிவம் கிடைக்கும். 2ஜி குற்றச்சாட்டின் மூலம் ஊழல் கரை படிந்ததை இவ்விடுதலை எளிதில் துடைத்துவிடாது. இவ்வாறு கூறினார். 

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்