Published on 21/02/2019 | Edited on 21/02/2019
இன்று உலக தாய்மொழி தினம்... அவரவர் தாய்மொழியை போற்றும் வகையில், நினைவு கூறும் வகையில் இந்த நாள் உருவாக்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவரவர் தாய்மொழியை இன்றைய நாளில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நாளை முன்னிட்டு, நாளை வெளியாகவிருக்கும் எல்.கே.ஜி. படத்தின் ‘தமிழ் ஆந்தம்’ வெளியாகிவுள்ளது.
இந்தப் பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இப்பாடலை பி.சுசிலா, வாணி ஜெயராம், எல்.ஆர். ஈஸ்வரி, சிட் ஸ்ரீராம், சின்மயி ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடலின் நடுவே ‘தமிழ்தாய் வாழ்த்து’ வருவதும் குறிப்பிடத்தக்கது.