தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையேயான கருத்துமோதல்.
கடந்த 4ம் தேதி திருச்சியில் நடபெற்ற மேகதாது அமைப்பதற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் தனது உரையின்போது, குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பதால் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது பாஜக... தமிழ்நாட்டில் தண்ணீர் இல்லை; புல்கூட முளைக்காத சூழலில், தாமரை மலர்ந்துவிடுமா? எனக்கூறினார்.
இதற்கு அன்றைய தினமே தனது பதில் கருத்தை ட்விட்டரின் வாயிலாக வெளியிட்டார் தமிழிசை சவுந்தரராஜன், “இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாவது குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம் காவிப்படை ரத்தத்தாலும், வியர்வையாலும் தாமரை மலரும். என ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஸ்டாலின் நேற்று ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டிருந்தார். சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்:
தாமரை மலர சூரிய சக்தி தேவை!
சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்!